10 வருடங்களின் பிறகு மெகாஸ்டார் வீட்டில் குழந்தை சத்தம்! இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த நெகிழ்ச்சி பதிவு
டோலிவுட் சினிமா மெகாஸ்டாரின் மகனான நடிகர் ராம் சரண் தன்னுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
காதல் திருமணம்
திரையுலகில் மெகாஸ்டார் சிரஞ்சிவியின் மகனான நடிகர் ராம் சரண், உபாசனா என்பவரை காதலித்து கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் தன்னுடைய கல்லூரி படிப்பை லண்டனில் படித்துள்ளார்கள். மேலும் இவர்களின் கல்லூரி காலத்திலிருந்து காதலித்து வந்துள்ளார்கள்.
தற்போது திருமணம் செய்து கொண்டு பத்து வருடங்களான நிலையில் தற்போது உபாசனா கற்பமாக இருப்பதாக சிரஞ்சிவி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பல பிரபலங்கள் தனக்கு குழந்தை இல்லாமல் இருக்கும் போது வாடகை தாயின் மூலம் குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள்.

வைரலாகும் டுவிட்டர் பதிவு
ஆனால் எவ்வளவு காலங்களானலும் தன்னுடைய குழந்தையை பெற்றுக் கொள்ள பிடிவாதமாக இருந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சிரஞ்சிவியின் இந்த பதிவை பார்த்து இவர்களின் குடும்பத்தினருக்கும் சரணுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதனை பார்த்த ராம் சரணின் ரசிகர்கள் இந்த செய்தி வைரலாக்கி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
— Chiranjeevi Konidela (@KChiruTweets) December 12, 2022