நடிகர் ராம்சரனுக்கு ரசிகர்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு...
நடிகர் ராம்சரனுக்கு ரசிகர்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது
சமீபத்தில் ஆஸ்கர் விருதுக்கு மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து 3 பிரிவுகளில் படங்கள் தேர்வானது.
சிறந்த பாடலுக்காக ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது.
இதற்கான விருதை பாடலாசிரியர் சந்திரபோஸூம், இசையமைப்பாளர் கீரவாணியும் பெற்றுக் கொண்டார்கள்.
நடிகர் ராம்சரனுக்கு உற்சாக வரவேற்பு
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஆஸ்கர் விருது விழாவிற்கு சென்று ஹைதராபாத் திரும்பிய நடிகர் ராம்சரனுக்கு ரசிகர்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
#WATCH | Telangana | RRR fame actor Ram Charan received a warm welcome as he arrived in Hyderabad last night
— ANI (@ANI) March 18, 2023
'Naatu Naatu' song from RRR won the Best Original Song award at #Oscars2023 pic.twitter.com/8nD8cFFoOt