வித்தியாசமான உடையில் மெழுகு சிலை போல் மாறிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்... குவியும் லைக்குகள்
நடிகை ரகுல் ப்ரீத் சிங் வித்தியாசமான ஆடையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
ரகுல் ப்ரீத் சிங்
தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் பிரபல நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங்.டெல்லியில் பிறந்து பல மொழிகளில் அசத்தி வரும் இவர் தடையற தாக்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே அயலான் ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக்கொண்டார்.
நடிகை ரகுல், தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பகானியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின்னரும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அவர், கடைசியாக இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது வித்தியாசமான ஆடையில் மெழுகு சிலை போல் தோற்றமளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளார்.குறித்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |