பிறந்த நாளில் காதலரை அறிமுகம் செய்த ரகுல் ப்ரீத் சிங்... இந்த நடிகர் தானா அவர்? அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர், மகேஷ் பாபு, ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலருக்கும் நாயகியாக நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில், கெளதம் கார்த்தியுடன் என்னமோ ஏதோ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். இந்நிலையில், பல படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர், அக்டோபர் 10- ல் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
இதனிடையே, இந்தி திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர் என வலம் வரும் ஜாக்கி பாக்நானியை காதலித்து வருவதைத் தனது பிறந்த நாளை முன்னிட்டு உறுதிப்படுத்தியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
மேலும், அவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரகுல் ப்ரீத் சிங் கூறியதாவது, “நன்றி அன்பே!! இந்த ஆண்டு நீ எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு.
என் வாழ்க்கையில் வண்ணத்தைச் சேர்த்த உனக்கு என்னுடைய நன்றி. என்னை இடைவிடாமல் சிரிக்க வைப்பதற்கு நன்றி. நீ நீயாக இருப்பதற்கு நன்றி. இன்னும் ஒன்றாகச் சேர்ந்து அதிக நினைவுகளை உருவாக்குவதற்கு.. என தெரிவித்துள்ளார்...