செம ட்ரெண்டிங் லுக்கில் மிரள வைத்த கார்த்தி பட நடிகை... குவியும் லைக்குகள்
நடிகை ரகுல் ப்ரீத் சிங் மஞ்சள் நிற ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம கிளாமராக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
ரகுல் ப்ரீத் சிங்
தெலுங்கு சினிமாவில் பல படங்களில் வந்த ரகுல் ப்ரீத் சிங் 2012 -ம் ஆண்டு வெளியான "தடையறத் தாக்க" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து புத்தகம், என்னமோ ஏதோ போன்ற படங்களில் நடித்தார். ஆனால், இவர் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை இந்த படங்கள் பெறவில்லை.
இதையடுத்து கார்த்தி நடிப்பில் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அந்த படத்தில் குழந்தை தனமான கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
அதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான 'என்.ஜி.கே' படத்தில் நடித்தார். தமிழில் இவர் இறுதியாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்தார்.
இதற்கிடையில் ரகுல், தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பகானியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார். இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் செம ட்ரெண்டியாக மஞ்சள் நிற உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்து ரகுல் ப்ரீத் சிங் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |