ரக்சிதாவுக்கு 9 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.. மருத்துவர்கள் கொடுத்த அட்வைஸ்! கணவரை பிரிய அதிர்ச்சி காரணம்?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் ரக்சிதா கணவரை ஏன் பிரிந்தார் என்ற காரணம் இணையத்தில் உலாவி வருகின்றது.
ரக்சிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியலில் அறிமுகமான நிலையில் அந்த சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் இருவரும் சீரியல்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகின்றனர் .
இந்த நிலையில் திடீரென ரக்சிதா தனது கணவரை பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டது.
ஒன்பது ஆண்டுகள் ஆகியும் ரக்சிதாவுக்கு குழந்தை இல்லை
இருவருடைய சமூக வலைதளங்களிலும் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகியும் ரக்சிதா குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்பதால் தான் தினேஷுக்கு மனவருத்தம் என்றும் அதனால்தான் இருவரும் தற்போது பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.
மருத்துவர்கள் கொடுத்த அட்வைஸ்
ரக்சிதா குழந்தை பெற வேண்டுமென்றால் அவர் சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்களாம்.
ஆனால் சீரியல்களில் நடிப்பதை தன்னால் நிறுத்த முடியாது என்று ரக்சிதா கூறியதால் அவருக்கும் அவருடைய கணவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்து இருவரும் இதுகுறித்து விளக்கம் அளித்தால் மட்டுமே தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.