ஒரே நாளில் 7000 பெண்கள்; சாதனை படைத்த ஆசிரியர்
ஒரே நாளில் சுமார் 7000 பெண்கள் ஆசிரியருக்கு ராக்கி கட்டியுள்ளனர். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஒரே நாளில் சுமார் 7000 பெண்கள்
ரக்சா பந்தன் விழாவையொட்டி பாட்னாவைச் சேர்ந்த பிரபல ஆன்லைன் ஆசிரியர் கான் சர் தனது பயிற்சி மையத்தில் ரக்சா பந்தன் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
அதில் அனைத்து பெண் மாணவிகளும் அவரின் மணிக்கட்டில் கிட்டத்தட்ட 7,000 ராக்கிகளைக் கட்டி உள்ளனர்.
இதில் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது சுமார் 7,000 பெண்கள் அவரது மணிக்கட்டில் ராக்கி கட்டி உள்ளனர். இது போன்ற சம்பவம் இதுவரை நடந்ததில்லை இது உலக சாதனை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதில் அதிகளவான மாணவிகள் கலந்துக்கொண்டதால் அனைவருக்கும் ராக்கி கட்ட முடியவில்லை. கான் சார் ஒவ்வொரு பெண்ணையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து ராக்கி கட்டிக் கொண்டார்.
"தனக்கு சொந்தமாக ஒரு சகோதரி கூட இல்லை. எனவே அவர் இந்த பெண்கள் அனைவரையும் தனது சகோதரிகளாக கருதிகிறேன். ஒவ்வொரு ஆண்டும் தனது மாணவர்களால் எனக்கு ராக்கி கட்டப்படுகிறது. தன்னைப் போல அதிக ராக்கிகளை உலகில் யாரும் கட்டிக்கொண்டிருக்க மாட்டார்கள்" என்று அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.