‘எனக்கு விவாகரத்து கிடைச்சாச்சு...’ - குஷியில் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை
விவகாரத்து கிடைத்த குஷியில் பிரபல பாலிவுட் நடிகை குத்தாட்டம் போட்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ராக்கி சாவந்த்
பாலிவுட் சினிமாத்துறையில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் ராக்கி சாவந்த். இவர் சினிமாவில் மட்டும் அல்ல மாடலிங் துறையிலும் சிறந்து விளங்கி வருகிறார். தமிழில் ‘என் சகியே’, ‘முத்திரை’, ‘கம்பீரம்’ உட்பட பல படங்களில் குத்தாட்டம் ஆடியுள்ளார். இவ்வளவு திறமை கொண்ட ராக்கி சாவந்த் அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கிக்கொள்வார்.
தொழிலதிபர் ரித்தேஷ் என்பவரை கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.
இதன் பின்னர் ஆதில் துராணி என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணம் நடந்த சில வாரங்களிலேயே இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
ஆதில் துராணிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக போலீசில் புகார் கொடுத்தார் ராக்கி சாவந்த். இதனையடுத்து இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆதிலை கைது செய்தனர். பின்னர் ராக்கி சாவந்த்விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார்.
குஷியில் குத்தாட்டம் போட்ட நடிகை
இந்நிலையில், நீதிமன்றம் ராக்கி சாவந்த்திற்கு விவகாரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ராக்கி சாவந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், பிரிந்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு குஷியில் குத்தாட்டம் போட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |