குருகுருனு பார்த்த நபரை நடுரோட்டில் விளாசிய நடிகை! தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி
தன்னையே பார்த்த ஒருவரை, இதற்கு முன்பு பெண்ணை பார்த்தது இல்லையா என்று கேட்டு விளாசியுள்ளார் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்.
மனதில் பட்டதை பேசுவதற்கு பெயர் போனவர் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த். சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 14 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் அவர் மும்பை சாலை ஒன்றில் புகைப்படக் கலைஞர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது யாரோ ஒருவர் தன்னையே பார்ப்பதை உணர்ந்தார் ராக்கி. இதையடுத்து அந்த நபருக்கு லெஃப்ட் அன்ட் ரைட் கொடுத்துவிட்டார்.
ராக்கி அந்த நபரை திட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ராக்கி கூறியிருப்பதாவது, அங்கிள் இங்கிருந்து போய்விடுங்கள்.
நான் பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறேன். ஏன் அப்படி பார்க்கிறீர்கள்? இதுவரைக்கும் பெண்ணையே பார்த்தது இல்லையா அங்கிள்?. தயவு செய்து கிளம்புங்கள் என்றார்.