சுருதிகாவை ஓட ஓட துரத்தும் பல்லி! திட்டம் போட்டு கதற விட்ட விஜய் டிவி - கலகலப்பான ப்ரோமோ
குக் வித் கோமாளி சீசன் 3 வெற்றியாளர் சுருதிகா பல்லியை கண்டு அலண்டு ஓடும் ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவதற்கு காரணம் அதன் வித்தியாசமான மேக்கிங் தான்.
அந்த வகையில் கடந்த இரு வாரங்களாக ஒளிபரப்பாகிவரும் ராஜு வூட்ல பாட்டி நிகழ்ச்சி சிறப்பான விருந்தினர்களுடன் களைகட்டி வருகிறது.
இதனிடையே இந்த வார நிகழ்ச்சிக்கான புதிய ப்ரமோ வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். ஸ்ருத்திகாவுக்கு பல்லி என்றால் பயம். இதனை தெரிந்து கொண்டு தெறித்து ஓட விட்டுள்ளார்கள்.
இந்த ப்ரோமோவை பார்க்கும் போது நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.