உடற்பயிற்சியின் போது திடீர் மாரடைப்பு! தீவிர சிகிச்சை பிரிவில் பிரபல நடிகர்
பிரபல நகைச்சுவை நடிகரான ராஜு ஸ்ரீவஸ்தவா உடற்பயிற்சி செய்து கொண்டிருந்து போது திடீர் மாரடைப்பு எற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா
ராஜூ ஸ்ரீவஸ்தவா பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியான "தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச்" முதல் சீசனில் பங்கேற்று அதன்மூலம் நகைச்சுவை நடிகராக அங்கீகாரம் பெற்றவர்.
பின்பு பல இந்தி படங்களில் நடித்த இவர் தற்போது, உத்தரபிரதேச திரைப்பட மேம்பாட்டு கவுன்சிலின் தலைவராக உள்ளார்.
நடிகர் ராஜு இன்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கையில், திடீரென சரிந்து விழுந்த அவரை அங்கிருந்த பயிற்சியாளர்கள் குறித்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் இரண்டு முறை சிபிஆர் (CPR) கொடுக்கப்பட்ட நிலையில், பின்பு ஆஞ்சியோகிராபி சிகிச்சைக்காக ஆய்வகத்திற்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
தற்போது நடிகர் ராஜுவின் உடல்நிலை அபாய கட்டத்தை தாண்டியதாகவும், மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இவ்வாறு கூறி வந்தாலும் வெண்டிலேட்டர் உதவியுடனே அவரது சுவாசம் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.