உங்கள் டிரஸ்ஸிலிருந்து நான் எடுக்கவா.. பவானியை திக்கு முக்காட வைத்த ராஜூ! அதிர்ந்து போன பிக் பாஸ் வீடு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று மீண்டும் ராஜூ தன் தனித்துவத்தை காட்டியிருப்பது பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
இதில் சுருதி பாவனியின் உதவியுடன் பாத்ரூம் சென்று தாமரை குளித்துவிட்டு உடைமாற்றும் போது காயினை எடுத்த சம்பவம் பிக்பாஸ் வீட்டில் மிகப் பெரிய பூகம்பமாக வெடித்திருக்கிறது.
டிரஸ் மாற்றும் ஒரு நிலையில் எப்படி நான் இது குறித்து, உன்னிடம் பேச முடியும் என்று தாமரை அழுது புலம்பியதுடன் “இதெல்லாம் தப்பு பாப்பா.. இது நம்பிக்கை துரோகம் என்றெல்லாம் பேசி விட்டார்.

உடனே, “இப்படி எல்லாம் பேசாதீர்கள்.. வார்த்தையை விடாதீங்க அக்கா” என்று பாவனி மற்றும் சுருதி இருவரும், தாமரையை எச்சரித்ததுடன், “இது வெறும் விளையாட்டு தான்.. தனி மனித தாக்குதல் வேண்டாம்.. உங்களை அசிங்கப்படுத்தி எடுக்க வேண்டும் என்று நாங்களும் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டனர்.
ஆனால் உடனடியாக சிபி, ராஜூ, இமான் அண்ணாச்சி என பலரும் தாமாக வந்து நின்று பாவனி மற்றும் சுருதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஆடையில் இருந்தால் கூட எடுக்கலாம் என்று சொல்கிறீர்களே.. அப்படி இருக்கும்போது இது என்ன தவறு என்று பாவனி கேட்டார்.
அதற்கு ராஜூ, “அப்படியானால் உங்கள் டிரஸ்ஸிலிருந்து நான் எடுக்கவா?” என்று கேட்டதும் பாவனி அதிர்ந்து போய், “நான் இந்த விவகாரம் லேடீஸ்களிடையே சொன்னேன்” என்று கூற, ஆனால் ராஜூவோ, “அதை எல்லாம் இந்த விஷயத்தில் பேசாதீர்கள்.” என்று கூறி விட்டு அங்கிருந்து நகரத் தொடங்கினார்.
இதேபோல் சுருதியிடம் பேசிய ராஜூ, “உன் மேல தப்பு இல்லனு நீ நெனைச்சா கூட தாமரையிடம் போய் பேசு.
நீ இதை செயதால் அவள் ரியாக்ஷன் இப்படி பெரிதாக இருக்கும் என்பது உனக்கு தெரியாதா?” என்று கேட்டதுடன், “தாமரையிடம் நீ நேரடியாக கேட்டிருந்தால் அவளே கொடுத்திருப்பாள் என்று தெரிவித்தார்.
சுருதியோ தனக்கு அப்படி ஆடுவதில் உடன்பாடு இல்லை என கூற, “இப்படிதான் ஆடணுமா?” என போகிற போக்கில் பேச, ஆனால் சுருதியோ அழுதார். இப்படியே பரபரப்புடன் நிகழ்ச்சி சென்றது.
நிச்சயம் வார இறுதியில் இது குறித்து கமல் கேட்பார் என் பார்வையாளர்கள் நம்புகின்றனர். பார்க்கலாம் என்ன நடக்கின்றது என்பதை.