குருநாதரை சந்தித்த ராஜூ.... அடுத்தடுத்து வீசும் அதிர்ஷ்டகாற்று! இனி ராஜயோகம் ஸ்டார்ட்
குருநாதர் இயக்குநர் பாக்கியராஜை சந்தித்து ராஜு ஜெயமோகன் பிக் பாஸ் டிராபியை கையில் கொடுத்து அவரது ஆசியை வாங்கி உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என பல கனவுகளுடன் சென்னை வந்து இறங்கிய ராஜு பாக்கியராஜிடம் தான் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில் தளபதி விஜய்யை பீஸ்ட் பட ஷூட்டிங்கில் சந்தித்து பேசினேன் எனக் கூறியிருந்தார்.
இயக்குநர் நெல்சனும் தனக்கு இயக்கத்தை கற்றுக் கொடுத்த குரு என சொல்லிய ராஜு ஜெயமோகன் தற்போது அவரையும் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ஷேர் செய்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி வருகிறார்.
பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டதில் இருந்தே ராஜு ஜெயமோகனின் வாழ்க்கையில் ராஜயோகம் ஸ்டார்ட் ஆகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
எந்தவொரு பெரிய சிக்கலும் இல்லாமல் போட்டியும் இல்லாமல் ராஜு எளிதாக மக்களின் அன்பை மட்டுமே பெற்று டைட்டிலை தட்டித் தூக்கினார்.
தற்போது குருநாதர்களின் ஆசிர்வாதமும் கிடைத்து விட்டது. அடுத்தடுத்து இனி களமிறங்க வேண்டியது தான்.