ஏறி மிதிச்சிட்டு போயிட்டு இருக்கணும்னு...அதிரடியாக எச்சரித்த ராஜூ! ரணகளமாகும் பிக் பாஸ் வீடு
ஆணி, மிக்சர் தின்பவர், டம்மி பீஸ் என விருதுகளை கொடுப்பதை பார்த்து இனிமேல் அமைதியா இருக்கக் கூடாது யாரையாவது ஏறி மிதிச்சிட்டு போயிட்டு இருக்கணும்னு தோணுது என்று ராஜு போட்டியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிக் பாஸ் விருதுகள் என்கிற டாஸ்க்கை ஆரம்பித்து சும்மா இருப்பவர்களை பிக் பாஸ் சீண்டி விட்டுள்ளார்.
பெஸ்ட் என்டர்டெயினர், புடுங்குறது பூரா தேவையில்லாத ஆணி, மிக்சர் தின்பவர், டம்மி பீஸ் என விருதுகளை கொடுத்து ராஜு பாயை கடுப்பாக்கி உள்ளனர் ஹவுஸ்மேட்ஸ்.
ராஜு ஜெயமோகனுக்கு புடுங்குறது பூரா தேவையில்லாத ஆணி விருதை இசைவாணி கொடுக்க காரணமே ராஜு இமானுக்கு சப்போர்ட் செய்வது மட்டும் தான்.
அந்த விருதை பெற்றுக் கொண்டு இனிமே தேவையுள்ள ஆணி புடுங்கப்படும் என ராஜு அதிரடியாக கூறியுள்ளார்.
இனி தான் அவரது ஆட்டம் ஆரம்பம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.