உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் ஆரோக்கியமான ராஜ்மா சுண்டல்... எப்படி செய்வது?
பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடையைக் குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால், என்னதான் முயற்சி செய்தாலும் பலருக்கு முன்னே தள்ளிக் கொண்டும் நிற்கும் தொப்பையை குறைக்க முடியவில்லை என்ற கவலை இருக்கத்தான் செய்கிறது.
தினசரி உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்ற பழக்கங்கள் உடல் எடையை குறைக்க ஓரளவுக்கு உதவும் என்றாலும், அதிக எடையை குறைப்பதற்கு இதை மாத்திரம் செய்வது போதுமானதாக இருக்காது.
உடல் எடையை கட்டுக்குள் வைக்க உணவு முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது மிகவும் இன்றியமையாதது.
அந்தவகையில் ராஜ்மா உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தெரிவாகும். அதில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரோட்டின், நார்ச்சத்து ஆகியவை அதிகளவில் அடங்கியுள்ளன.
மேலும் அதில் காணப்படும் அதிக நார்ச்சத்தானது உடல் எடையை சீராக வைத்திருக்க உதவுகிறது. எனவே ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க சுவையான ஊட்டச்சத்தக்கள் நிறைந்த ராஜ்மா சுண்டல் எப்படி செய்யலாாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிவப்பு ராஜ்மா - 1 கப்
காய்ந்த சிகப்பு மிளகாய் - 2
கொத்தமல்லி விதை - 1 தே.கரண்டி
கடலைப்பருப்பு - 1தே.கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எண்ணெய் - 1தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையானவை
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 1 தே.கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் சிவப்பு ராஜ்மாவை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊறவைத்து கொள்ளுங்கள். (இரவு முழுவதும் அல்லது குறைந்தது 10 மணி நேரமாவது ஊறவைக்க வேண்டும்)
பின்னர் அதனை உரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்துக் நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப்பருப்பு, கொத்தமல்லி விதைகள், காய்ந்த சிகப்பு மிளகாய் மற்றும் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
வறுத்தெடுத்த பொருட்களை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடிக்க விட்டு உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் வேகவைத்த ராஜ்மாவைச் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு அதனுடன் அரைத்த பொடியைச் சேர்த்துக் நன்கு கலந்துவிட்டு இறக்கினால் ஆரோக்கியம் நிறைந்த ராஜ்மா சுண்டல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |