ராஜ்கிரண் கேட்ட ஒற்றை கேள்வி.. அஜித் உறவை துண்டித்தது ஏன்?
தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களின் முக்கியமானவர் அஜித்குமார், தன்னம்பிக்கை மிக்கவர், உழைப்பால் முன்னேற்றம் கண்டவர், எளிமையானவர் என பலரும் புகழாரம் சூட்டக்கேட்டிருப்போம்.
சினிமாவையும் தாண்டி குடும்பம், தன் லட்சியம் என தனக்கு பிடித்த விடயங்களை ஆழமாக சிந்தித்து செயலாற்றக்கூடியவர் அஜித்.
இவரது நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் வலைப்பேச்சு அந்தணன் அஜித் குறித்த தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், அஜித்தை பற்றி உண்மையை சொல்கிறேன், அஜித்குமாரும், ராஜ்கிரணும் நெருங்கி பழகிக் கொண்டிருந்தனர்.
ராஜ்கிரண் குணம் பிடித்துப்போக, அப்பாவாகவே பார்த்துக்கொண்டார் அஜித்.
பொதுவாக அஜித் யார் வீட்டுக்கும் செல்லமாட்டார், ஆனால் தனக்கு நெருக்கமான நபர்களின் வீட்டிற்கு செல்வார், அங்கே நேரம் கழிப்பது அவருக்கு பிடிக்கும்.
அந்த பட்டியலில் தான் ராஜ்கிரணும் இருந்தார், அவரை பார்க்க தோன்றினால் நேரடியாக படப்பிடிப்பிற்கே சென்று விடுவார்.
அப்படித்தான் இருவரது உறவும் சென்று கொண்டிருந்தது, ஒருநாள் ராஜ்கிரண் தன்னுடைய கோரிக்கை ஒன்றை அஜித்திடம் கூறியிருக்கிறார்.
அதாவது, தனது கடனை அடைக்க அஜித் ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என கேட்டார், அவ்வளவு தான் ராஜ்கிரணின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
தனக்கு நெருக்கமானவர்கள் தன்னிடம் எதையும் எதிர்பார்க்கக்கூடாது என நினைப்பவர் அஜித், இதனாலேயே அவர்களது உறவும் முறிந்துபோனது என தெரிவித்துள்ளார்.