ஜெயிலர் 2 - பிரபல நடிகையின் சூப்பர் அப்டேட்
ஜெயிலரில் முத்துவேல் பாண்டியனின் மருமகளாக வசந்த் ரவியின் மனைவியாக நடித்த மிர்னா ஜெயிலர் 2 படத்தின் அப்டேட் வழங்கியுள்ளார்.
ஜெயிலர்
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து. தற்போது கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்திருந்தார்.
அந்த திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
த்ரில்லர் படமாக உருவாகிய அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். படம் வெளியாகிய தருணத்தில் வில்லனாக நடித்த விநாயகனின் நடிப்பும், அனிருத்தின் இசையும் அதிகமாக அனைவரலும் பேசப்பட்டது.
உலகம் முழுவதும் 600 கோடிகளைத் தாண்டி ஜெயிலர் வசூலித்ததாக, படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் கூறியிருந்தது.
இந்நிலையில் அப்படத்தில் நடித்த பிரபல நடிகை மிர்னா ஜெயிலர் 2 அப்டேட் வழங்கியுள்ளார்.
ஜெயிலர் 2 அப்டேட்
ஜெயிலரில் முத்துவேல் பாண்டியனின் மருமகளாக வசந்த் ரவியின் மனைவியாக மிர்னா நடித்திருந்தார்.
ஜெயிலர் 2 குறித்து இவர் இயக்குநர் நெல்சனிடம் பேசிய போது, ஜெயிலர் 2 படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
நான் இந்த சீக்வெலில் இருப்பனா என்பது தெரியாது. அது முழுக்க இயக்குநரின் முடிவு. அவர் இரண்டாவது பாகத்திலும் நான் இருக்க வேண்டும் என்று விரும்பினால், ஜெயிலர் சீகவெலில் நானும் இருப்பேன் என மிர்னா கூறியுள்ளார்.
மேலும் இவ்வாறு இது கூறியதை வைத்து ஜெயிலர் 2 படத்துக்கான வேலைகள் நடந்துக்கொண்டிருப்பது உறதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |