ஆங்கில புத்தாண்டையொட்டி ரஜினிகாந்த் கொடுத்த சர்ப்ரைஸ்! காத்திருந்த ரசிகர்களுக்கு கிடைத்த தரிசனம்
புத்தாண்டு வாழ்த்து கூறுவதற்காக ரஜினிகாந்த் வீட்டு வாசலில் காத்திருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஆங்கில புத்தாண்டு
ஆங்கில புத்தாண்டையோட்டி உலகளாவிய ரீதியில் பல இடங்களில் கொண்டாட்டங்கள் கலைக்கட்டியுள்ளது. மேலும் இதனால் பல பிரபலங்கள் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் இன்று வரை சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினி காந்திற்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்காக ரசிகர்கள் வாசலில் காத்திருந்தனர்.
மேலும் ரஜினிகாந்தின் வீட்டில் தோரணங்கள் கட்டி கொண்டாட்டங்களை அறிவித்துள்ளனர்.
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..#உன்வாழ்க்கை_உன்கையில்
— Rajinikanth (@rajinikanth) December 31, 2022
ரஜினி கொடுத்த ஷாக்
இதனை தொடர்ந்து ரஜினிக்கு வாழ்த்துக்கள் கூறுவதற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு கையசைத்தப்படி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர் நேற்றைய தினமே ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.