ரஜினிகாந்த்தின் உடலுக்கு என்ன பிரச்சினை... மருத்துவமனையின் லேட்டஸ்ட் அப்டேட்
நடிகர் ரஜினிகாந்த் கடந்த நாள் வியாழக்கிழமை அன்று மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 3வது நாளாக மருத்துவகுழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடையே, அவரின் உடல் நிலை இயக்குனர் அரவிந்ததன் செல்வராஜ் வெளியிட்ட அறிக்கையின் படி, ரஜினிகாந்திற்கு கழுத்துப்பகுதி வழியாக மூளை மற்றும் முகம் இதயத்திற்கான இரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அவர் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும் ஒரு சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் கூறியுள்ளனர். கடந்த நாளில் மனைவி லதா மற்றும் அவரது மருமகன் நடிகர் தனுஷ் அகியோர் வருகை தந்து, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை பற்றி கேட்டறிந்தனர்.
மருத்துவ குழுவினர் தொடர்ந்து ரஜினிகாந்தின் உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர்.