நடிகையின் காலை பிடிக்க மறுத்த ரஜினி! பல ஆண்டுகளுக்கு பின்பு லீக்கான ரகசியம்
நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் ஒன்றில் ஹீரோயின் காலை பிடிக்கமாட்டேன் என்று கூறியுள்ள தகவலை பிரபலம் ஒருவர் தற்போது வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் இன்றும் தனது ஸ்டைலில் நடிப்பில் அசத்தி வருகின்றார்.
இந்நிலையில் சென்ற ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தைத் தொடர்ந்து 169வது திரைப்படததில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார்.
தற்போது ரஜினியைக் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதனை பல ஆண்டிற்கு பின்ப நடிகை ஒருவர் வெளியிட்டுள்ளார்.
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் தயிர்! யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

ஹீரோயின் காலை பிடிக்க மறுத்த ரஜினி
ரஜினிகாந்த் தான் நடிக்கும் படத்தினைக் குறித்து ரசிகர்களின் விமர்சனம் எவ்வாறு இருக்கும் என்பதை ஓரளவிற்கு கணிக்ககூடியவர் என்றே கூறலாம்.
அவ்வாறு கடந்த 1989ம் ஆண்டு ரஜினிகாந்த், ஷோபனா நடிப்பில் வெளிவந்த சிவா படத்தில் ஒரு காட்சியில் சோபனாவின் கால்களை ரஜினி பிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டதாம்
ஆனால் ஒரு பெண்ணின் கால்களை தன்னால் பிடிக்க முடியாது என ரஜினி மறுத்துவிட்டார் என்பதை பல ஆண்டிற்கு பின்பு அப்படத்தில் நடிகையாக நடித்த ஷோபனா தற்போது வெளியிட்டுள்ளார்.
