ரஜினியின் கூலிங் கிளாஸில் ஏற்பட்ட மாற்றம்! பதறும் ரசிகர்கள் - அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா?
நடிகர் ரஜினிகாந்த் அணிந்திருக்கும் புதிய கூலிங் கிளாஸ் அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
திடீரென ரஜினிகாந்த் இந்த கூலர் கண்ணாடியுடன் வலம் வர என்ன காணம் என்று பலரும் புரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் நேற்று பேசியது அரசியல் வட்டாரத்தில் ஏகப்பட்ட அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது.
கூலிங் கிளாஸை மாற்றிய ரஜினி
அரசியலுக்கு வரப் போவதில்லை என்றும் மக்கள் பிரச்சனை குறித்த கேள்விகளுக்கு நோ கமெண்ட்ஸ் என ரஜினி பேசியது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
அதையும் தாண்டி இதையெல்லாம் ஓவர்டேக் செய்யும் விதமாக ரஜினி வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு அணிந்து வந்த அந்த கூலிங் கிளாஸ் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக அமைந்திருக்கிறது.
திடீரென இப்படி கூலர் கண்ணாடியுடன் ரஜினி வருவதற்கான முக்கியமான காரணம் பற்றிய தகவலும் வெளியாகி உள்ளன.
கண் அலர்ஜி
நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் கண் அலர்ஜி காரணமாக அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்கான சிகிச்சையை சமீபத்தில் மேற்கொண்ட நிலையில், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில், இப்படி கூலிங் கிளாஸ் கண்ணாடியுடன் வெளியே வருகிறார் எனக் கூறுகின்றனர்.