சம்பளத்தை கோடிகளில் அள்ளும் சூப்பர் ஸ்டார் - சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகர் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு தொடர்பிலான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த்
“ சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.. சின்ன குழந்தையும் சொல்லும்” என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர் தான் ரஜினிகாந்த்.
இவர் சினிமாவை பற்றி கற்றுக் கொண்ட பின்னர் அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார்.
அன்று முதல் இன்று வரை தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்து கொண்டு இருக்கிறார்.
சினிமாவில் சுமாராக 45 வருடங்களுக்கு மேல் ஹீரோவாக இருக்கும் ரஜினி இன்றைய தினம் தனது 73 ஆவது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், சினிமாவில் 48 வருடங்களை பூர்த்தி செய்த ரஜினி 400 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் ரஜினிகாந்திடம், போயஸ் கார்டனில் ஒரு பெரிய பங்களா 40 கோடி ரூபாய் மதிப்பில் உள்ளது. அத்துடன் அவரிடம் இருக்கும் கார்களில் 4 ஃபாரீன் கார்களின் விலை மாத்திரம் 20 கோடியை தாண்டும் என கூறப்படுகின்றது.
மேலும் ஜெயிலர் படத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் 80 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் என்றும் தலைவர் 170 படத்துக்கு 140 கோடி சம்பளம் என்றும் தலைவர் 171 படத்துக்கு 200 கோடி சம்பளம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆக மொத்தமாக ரஜினியிடம் தற்போது 480 முதல் 500 கோடி ரூபாய் சொத்து இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |