செம்ம ஜாலியா ட்ரிப் போன ரஜினி: இலங்கையில் உற்சாக வரவேற்பு
செம்ம ஜாலியா ட்ரிப் போன ரஜினிகாந்திற்கு இலங்கை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
ரஜினியின் ஜெய்லர் படம்
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால் உட்பட பலர் நடித்து வருகிறார்கள்.
வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் அருண்ராஜா காமராஜ் எழுத்தில், அனிருத் இசையில், நடிகை தமன்னாவின் நடனத்தில், ஷில்பா ராவ் குரலில் வெளியான ‘காவாலா’ பாடல் வெளியாகி ஒரு சில நிமிடத்திலேயே பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனைப் படைத்துள்ளது.
இன்ஸ்டா, டுவிட்டர் என்று சமூகவலைத்தளங்களில் இப்படம் தான் ஆக்கிரமித்துள்ளது. இது ஒரு புறம் இருக்க, தற்போது நடிகர் ரஜினி ‘லால் சலாம்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்னை தொடங்கி இருக்கிறார். இப்படத்திற்கு பிறகு தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கிறார்.
இலங்கையில் உற்சாக வரவேற்பு
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் இலங்கை வழியாக மாலத்தீவு சென்றிருக்கிறார்.
இலங்கையில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு அவரது ரசிகர்கள் மட்டுமல்ல ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸும் உற்சாக வரவேற்பு கொடுத்தது.
இது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், தன் டுவிட்டர் பக்கத்தில் ரஜினியின் புகைப்படத்தை வெளியிட்டு ரஜினி இன்ஸ் இலங்கை வழியாக மாலத்தீவிற்கு சென்றார். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்ததில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளது.
தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடா... நம்ம தலைவர் தலைவர்தான்.. இந்த வயதிலும் ரொம்ப பிசியாக இருந்தாலும், ஜாலியா சுற்றுலா சென்றிருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Indian legendary actor #Superstar @Rajinikanth arrived at the #Colombo Katunayake International Airport today on his way from #Chennai to the #Maldives via Sri Lanka. The #legendary #actor was welcomed by #SriLankan #Airlines staff. pic.twitter.com/0b9PIDQDm0
— Robert (@RobertsAntony) July 14, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |