பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸாப்புக்கு போட்டியாக புதிய செயலி! அதிரடியில் ரஜினிகாந்த்
இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ்அப் உட்பட்ட செயலிகளை ஓவர்டேக் செய்யும் விதமாக ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா புதிய செயலி ஒன்றினை நாளை ரஜினிகாந்த் மூலம் வெளியிடவிருப்பது தற்போது பாரிய பேச்சுப் பொருளாக இருந்து வருகின்றது.
உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளத்தினை வைத்திருக்கும் ரஜினியின் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில் தற்போது திடீர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை மத்திய அரசு நடிகர் ரஜினிகாந்திந்திற்கு அறிவித்துள்ளது. மேலும் சிறந்த நடிகருக்கான விருது தனுஷிற்கும், துணை நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும் வழங்கப்படவிருக்கின்றது.
இந்நிலையில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளைய தினம் மிகவும் முக்கியமான நாள் என்றும் இதில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடைபெற இருப்பதாக கூறியுள்ளார். அதில் முதலாவதாக குறித்த விருதைப் பற்றி கூறியிருக்கிறார்.
இரண்டாவதாக தனது மகள் உருவாக்கியுள்ள Hoote App_ஐ ரஜினிகாந்த் தனது குரலில் பதிவிட்டு தொடங்கி வைக்க இருக்கின்றார்.
உலகம் முழுவதும் தற்போது இயங்கிவரும் முகநூல், வாட்ஸ்ஆப் செயலிகளை ஓவர்டேக் அளவிற்கு இந்த செயலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏனெனில் வரும் காலங்களில் சமூக வலைதளங்கள் குரல் பதிவியே பெரும்பாலும் சார்ந்திருக்கும் என்று கூறப்படுகிறது. அதனை மெய்ப்பிக்கும் விதமாக கிளப்ஹவுஸ் செயலி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது இவை அனைத்திற்கும் போட்டியாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா விசாகன், அவரது சொந்த முயற்சியில் Hoote App என்ற செயலியை உருவாக்கியிருக்கிறார்.
இதில் மக்கள் தாங்கள் விரும்புவதை குரல் பதிவாக பகிர்ந்துகொள்ள முடியும். அனைத்து மொழிகளிலும் இதில் பதிவிட முடியும். இந்த செயலியை நாளைய தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமது குரலில் பதிவிட்டு தொடங்கி வைக்க இருக்கிறார்.
ரஜினிகாந்த் தொடங்கிவைப்பதால் உலகம் முழுவதும் ஹாட்டி செயலில் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.