ரஜினி மேடையில் போட்ட ஆட்டம்....மருமகன் தனுஷையும் மிஞ்சிட்டாரே! லீக்கான வீடியோ
நடிகர் ரஜினியின் பழைய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே ரஜினிகாந்தின் வீடியோ ஏதாவது ஒன்று வந்தால் போதும் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி விடுவார்கள்.
அதிலும் சமீபகாலமாக பழைய வீடியோக்கள் சோசியல் மீடியாவில் உலா வந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் மேடையில் நடனமாடி, வசனங்கள் பேசி இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இது கடந்த 1995ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு விழாவில் ரஜினிகாந்த் கலந்து இருந்தார்.
Thalaivar stage performance ?#Rajinikanth pic.twitter.com/WHmZWRrrWZ
— J E B A _T A M I L A N ? (@samueltwitz) January 5, 2022
இந்த நிகழ்வில் ரஜினிகாந்துடன் நடிகை குஷ்பு, லதா ரஜினிகாந்த் உட்பட பலரும் கலந்து இருந்தார்கள். அப்போது ரஜினிகாந்த் அவர்கள் மேடையில் பாட்ஷா கெட்டப் போட்டு மாசான வசனங்களை பேசி நடனமாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து இருந்தார்.
அதுமட்டுமில்லாமல் ரஜினிகாந்துடன் குஷ்புவும் இணைந்து மேடையில் நடனம் ஆடியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த விழாவை அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த கேப்டன் தான் ஏற்பாடு செய்து இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நடனத்தில் மருமகன் தனுஷை மிஞ்சி விட்டாரே என்று லைக்குகளை குவித்து வருகின்றனர்.