விவாகரத்துக்கு வைத்த முற்றுப்புள்ளி! மீண்டும் இணையும் தனுஷ் ஐஸ்வர்யா?
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்த நிலையில், தற்போது இருவரும் விவாகரத்து முடிவை விட்டுவிட்டு சேர்ந்து வாழப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், நடிகர் தனுஷும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரு மகன்கள் உள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரியப்போவதாக அறிவித்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தனர்.
தற்போது இருவரும் தனித்தனியாக பிரிந்து அவரவர் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி வந்தனர். பிள்ளைகள் இருவரிடமும் மாறி மாறி இருந்து வருகின்றனர். இவர்களின் வாழ்க்கை குறித்து பலரும் சமாதானம் செய்தும் தோல்வியே ஏற்பட்டதாகவும், இருவரும் பிரியப்போவதாக தகவல் வெளியானது.
ஒன்று சேரப் போகிறார்களா?
இந்நிலையில் இருவரது குடும்பத்தினரும் இவர்களை மீண்டும் சேர்த்துவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியரின் மூத்த மகன் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக பதவியேற்ற போது தனுஷும் ஐஸ்வர்யாவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் ரசிகர்கள் பலரும் இருவரும் மீண்டும் இணையப்போகிறார்களோ என்று சந்தேகித்து வந்தனர்.
இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த விவாகரத்து முடிவை ரத்து செய்து மீண்டும் பந்தத்தில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.