நடு காட்டில் கேட்ட அழுகுரல்! மரப்பெட்டியை திறந்தவருக்கு காத்திருந்த ஷாக்? ரஜினியின் ‘தளபதி’ பட பாணியில் நடந்த உண்மை சம்பவம்
ரஜினியின் ‘தளபதி’ திரைப்படத்தின் சம்பவம், நிஜத்தில் பாதி நடந்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் குல்லு தாத்ரி வனப்பகுதியில் உள்ள கங்கை ஆற்று கரையில் குழந்தை ஒன்றின் அழுகுரல் கேட்டுக்கொண்டிருந்துள்ளது.
இந்த குரலை கவனித்த அங்கிருந்த தொழிலாளி ஒருவர் ஒரு மரப்பெட்டி ஆற்றில் மிதந்து வந்ததை கவனித்திருக்கிறார்.

உடனே பெட்டியை திறந்தவருக்கு காத்திருந்தது ஆச்சரியம். பெட்டிக்குள் இருந்ததோ பச்சிளம் குழந்தை. அத்துடன் குழந்தையின் ஜாதகம், துர்க்கையம்மன் படம் உள்ளிட்டவை உடன் இருந்துள்ளதுடன், ‘கங்கையின் மகள்’ என்று எழுதப்பட்ட குறிப்புச் சீட்டும் இருந்துள்ளது.
இதை அறிந்த போலீஸார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் குழந்தை நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன.