தனுஷ் தனது மருமகன் இல்லை....சர்ச்சையில் சிக்கிய ரஜினி! ஏன் ஓட்டு போட போகவில்லை தெரியுமா?
மகளின் விவாகரத்து அறிவிப்பால் மனம் உடைந்துள்ள ரஜினிகாந்த் இது குறித்து செய்தியாளர்களை சந்திக்க தயங்கியதன் காரணமாகவே ரஜினி ஓட்டளிக்க வரவில்லையாம்.
வெளியில் சொல்ல இயலாத துக்கத்தில் இருக்கும் ரஜினி சமீபத்தில் நெருங்கிய நண்பர்களிடம் தனுஷ் தனது மருமகன் இல்லை மூத்த மகன் என கூறியுள்ளார்.
ரஜினியின் இந்த பாசத்திற்காவது தனுஷ் மனமிறங்கி விவாகரத்து முடிவை கைவிடுவாரா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதேவேளை, இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிக்க ரஜினி வரவில்லை.
ரஜினி ஓட்டளிக்க வருவார் என காலை முதலே ரசிகர்கள், பத்திரிக்கையாளர்கள் என போயஸ் கார்டன் முதல் ஓட்டுச்சாவடி வரை காத்து கிடந்தனர்.
ஆனால் கடைசி வரை ரஜினி வரவேயில்லை. ரஜினி ஊரில் இருந்தும் ஓட்டளிக்க வராதது பற்றி அப்போதே சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.
அவர் இதுவரை வாக்களிக்காமல் இருந்தது இல்லை.
ஜனநாயகத்தின் முக்கிய கடமையான வாக்களிப்பதில் முன்னுதாரணமாக இருக்கவேண்டிய லட்சக்கணக்கான ரசிகர்களை மக்கள் விரும்பும் பிரபலங்கள் பின் பற்றாதது குறித்து பலரும் வருத்தத்தை பதிவிட்டு வருகின்றனர்.