மகள் வயது நடிகைகளுடன் ஜோடி சேர்வதா? தயக்கம் காட்டும் ரஜினிகாந்த்
இளவயது நடிகைகளுடன் ஜோடி சேர தயக்கம் காட்டுகிறாராம் ரஜினிகாந்த்.
தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த், அவருடைய ஸ்டைல், நடிப்புக்கே ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
இதுவரை 168 படங்களில் நடித்து முடித்துள்ள ரஜினிக்கு, 169-வது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் கதாநாயகி யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனினும் 40 வயதுக்கு குறைந்த நடிகைகளுடன் நடிக்க ரஜினி தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.
அப்படியெனில் யாரை நடிக்க வைக்கலாம் என ரஜினியிடமே கேட்ட போது, ‘‘ஐஸ்வர்யா ராயை கேட்டுப் பாருங்கள்’’ என்று கூறினாராம்.
ஆனால் அவரது சம்பளமோ 10 கோடி ரூபாய் என்பதால், தயாரிப்பு நிறுவனம் தயங்கியதாகவும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்றும் வருகிறதாம்.
எனவே விரைவில் ரஜினி படத்தின் நாயகி யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.