தனுஷ்-காக இருக்கை கேட்டாரா ரஜினிகாந்த்? வைரலாகும் வீடியோ காட்சிகள்
நடிகர் ரஜினிகாந்த் தனுஷீற்காக அயோத்தி ராமர் கோயிலில் சீட் கேட்டது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகர் ரஜினிகாந்.
இவர் நடிப்பில் கடைசியாக ஜெய்லர் திரைப்படம் வெளியாகி வெற்றிநடை போட்டது.
இதனை தொடர்ந்து ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள “லால் சலாம்” திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் ரஜினிகாந்த் அயோத்தியில் இடம்பெற்ற ராமர் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், ரஜினிகாந்திற்கு விஜபி இருக்கை ஒதுக்கப்பட்டு முன் வரிசையில் அமரும் வாய்ப்பு கிடைத்தது. இவருடன் சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன் ஆகியோரும் அமர்ந்திருந்தனர்.
நிகழ்ச்சியில் தனுஷ் மற்றும் அவருடைய மகன் கலந்து கொண்டனர். இவர்களையும் முன்வரிசையில் அமர வைக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகியிடம் ரஜினி கேட்டுக் கொண்டார். ஆனால் அவரின் கோரிக்கை அங்கு மறுக்கப்பட்டது.
இதன்போது எடுக்கப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை ப்ளு சட்டை மாறன் அவரின் டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
அத்துடன், “இனி ரஜினிகாந்த் அரசியலில் இல்லை. கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி” என பேசியமையும் குறிப்பிடத்தக்கது.
முன்வரிசையில் எக்ஸ்ட்ராவா ரெண்டு சீட் கிடைக்குமா?
— Blue Sattai Maran (@tamiltalkies) January 24, 2024
மிக முக்கிய நபர்களுக்கு மட்டுமே முன்வரிசையில் அனுமதி. அதில் தலீவரும் ஒருவர். ஒருபக்கத்தில் ராமர் கோவில் நுழைவு வாயில். மூன்று பக்கங்களில் விஐபி இருக்கைகள். உதாரணம்: அமிதாப், அம்பானி, ரஜினி.
தனுஷ் உள்ளிட்டோர் சிலவரிசைகள் தள்ளி… pic.twitter.com/hUmp9Tejf8
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |