தந்தை ரஜினியின் பிறந்தநாளுக்கு ஐஸ்வர்யா கொடுத்த சர்ப்ரைஸ்! வைரல் புகைப்படம்
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு மகள் ஐஸ்வர்யா லால்சலாம் படத்தின் போஸ்டரை வெளியிட்டு சர்ப்ரைஸுடன் ரஜினிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா அளித்த சர்ப்ரைஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’லால் சலாம்’ என்ற படம் ஆகும். இப்படத்தில் ரஜினியின் கெட்டப் வித்தியாசமாக காணப்படுகின்றது.
இன்று ரஜினியின் 72வது பிறந்தநாள் என்பதால் மகள் ஐஸ்வர்யா குறித்த படத்தின் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா வெளியிட்ட பதிவில், ‘தினமும் கோடிக்கணக்கானவர்களை மகிழ்விக்கும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.... தினமும் கொண்டாடப்பட வேண்டிய சூப்பர்ஸ்டாரும் எனது தந்தையுமாகிய நீங்கள் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என்று வாழ்த்து கூறியுள்ளார்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஏஆர் ரகுமான் இசையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லால்சலாம்’ படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படம் 2023 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No amount of praise is enough for you ..
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) December 12, 2022
You make millions happy everyday..
You are to be celebrated every single day..
But today wishing you THE SUPER STAR ⭐️ MY APPA and OUR ONE AND ONLY THALAIVA the happiest healthiest and the most heartfelt HAPPY BIRTHDAY #rajiniday pic.twitter.com/gk6A0eqsKx