ராஜஸ்தானி கொய்யாப்பழ சட்னி ரெசிபி- 10 நிமிடத்தில் செய்வது எப்படி?
பொதுவாக வீடுகளில் காலையுணவாக இட்லி, தோசை செய்வது வழக்கம்.
அதற்கு தினமும் ஒரே வகையான சட்னி செய்யாமல் புது வகையான சட்னி செய்தால் வீட்டிலுள்ளவர்கள் காலையுணவை விரும்பி சாப்பிடுவார்கள்.
இதன்படி, வீட்டில் கொய்யாப்பழம் இருந்தால் அதனை வைத்து சுவையான சட்னி செய்யலாம். இதனை ராஜஸ்தானி கொய்யாப்பழ சட்னி என அழைப்பார்கள்.
அப்படியாயின் ராஜஸ்தானி கொய்யாப்பழ சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* காஷ்மீரி வரமிளகாய் - 5
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* தண்ணீர் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* கொய்யாப்பழம் - 1
* நாட்டுச்சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
சட்னி செய்முறை
முதலில் மிக்ஸியில் 5-6 காஷ்மீரி வரமிளகாய், 1 டீஸ்பூன் சீரகம், சிறிது உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைக்கவும்.
பின்னர் கொத்தமல்லி, 1 நறுக்கிய கொய்யாப்பழம் ஆகியவற்றுடன் சிறிது நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அரைத்து எடுத்தால் சுவையான ராஜஸ்தானி கொய்யாப்பழ சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |