நடிகர் கொட்டாச்சி மகளா இது? குழந்தையை மேடையில் வைத்து சத்தம் போட்ட தயாரிப்பாளர்
தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக வலம் வரும் நடிகர் கொட்டாச்சி. இவரது மகள் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் கலக்கி வருகின்றார்.
கொட்டாச்சி மகள் மானஸ்வி
கடந்த ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வந்து சூப்பர் ஹிட் கொடுத்த இமைக்காநொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக மானஸ்வி நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பின்பு ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தில் நடித்த இவர், மலையாளத்தில் மை சாண்டா என்ற படத்தில் நடித்து குழந்தை நட்சத்திர விருதை தனது தந்தை கொட்டாச்சியுடன் சென்று வாங்கினார்.

சிம்பு, ஹன்சிகாவுடன் மானஸ்வி
மானஸ்வி, ஹன்சிகா மற்றும் சிம்பு நடித்துள்ள மஹா படத்தில் நடித்து இருக்கிறார். மேலும் இந்த படத்தில் ஹன்சிகாவின் முன்னாள் காதலரான சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது.
குழந்தைகளை கடத்தி கொடூரமாக கொலை செய்யும் ஒரு சைக்கோ கொலைகாரனிடம் ஹன்சிகா குழந்தையும் மாட்டிக்கொள்கிறது. அந்த சைக்கோவிடம் இருந்து குழந்தையை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே இந்த படத்தின் கதை.

மானஸ்வியை கடிந்த ராஜன் :
இந்நிலையில் இந்த படத்தின் பிரெஸ் மீட் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், மானஸ்சி பேசிய போது படக்குழு அனைவருக்கும் நன்றி தெரிவித்து இருந்தார்.
அப்போது அவரை அழைத்த தயாரிப்பாளர் ராஜன் ‘எல்லாருக்கும் நன்றி சொல்லிவிட்டு ஒரு தயாரிப்பாளரை இப்பவே விட்டுட்டியே தயாரிப்பாளர் மதியழகன் பெயரை சொல்லவில்லை என்று செல்லமாக கூறினார்.
பின்பு மானஸ்சி மன்னிப்பு கேட்டுவிட்டு அவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். இந்த வீடியோவை கண்ட பலரும் குழந்தையிடம் கூட இப்படி பேசுவீர்களா என்று ராஜனை திட்டி தீர்த்து வருகின்றனர்.