நடிகை தேவயானியின் கணவர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?
தேவயானியின் கணவரும் திரைப்பட இயக்குனரும் ஆன ராஜகுமாரன் தற்போது புதிய தொழிலில் களமிறங்கி உள்ளார்.
இயக்குனர் ராஜகுமாரன்
நாம் ஒரு துறையில் இருந்து அதில் வெற்றி கிடைக்காமல் போனால் மனதை தளர விடாமல் அடுத்த கட்டத்தை நோக்கி செல்பவனே உண்மையான தைரியசாலி.
இதற்கு பொருத்தமாக தான் இயக்குனர் ராஜகுமாரன் இருக்கிறார். அதாவது 'நீ வருவாய் என', 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' போன்ற அழகான படங்களை இயக்கியவர் ராஜகுமாரன்.
அந்த கால கட்டத்தில் திரையுலகில் பிரபலமான ஒரு இயக்குனராக இவர் காணப்பட்டார். அவர் இயக்கிய படத்தில் நடித்த நடிகை தேவயானியைக் காதலித்து கரம் பிடித்தார்.
இவருக்கு திரைப்படங்கள் மூலம் பெரிய அளவில் புகழ் இருக்கவில்லை. ஆனால் எதற்கும் தளர்ந்து போகாமல் தற்போது புதிய பிசினஸ் தொடங்கி உள்ளார் ராஜகுமாரன்.
சினிமா வாழ்க்கை
சமீபத்தில் ஒரு போட்டியில் கலந்துகொண்ட ராஜகுமாரன் சில வார்த்தைகளை பேசி இருந்தார். "திரைத்துறையில் 40 வருடங்களாக இருக்கிறேன்.
ஆனால், இந்த 40 வருடங்களில் வருடத்திற்கு ஒரு லட்சம் என 40 லட்சம் கூட நான் சம்பாதிக்கவில்லை" என்று அவர் மனம் திறந்து பேசி இருந்தார்.
பொதுவாக எந்த திரைத்துரையை சேர்ந்தவாகளும் இப்படி மனம் திறந்து பேச மாட்டார்கள். ஆனால் ராஜ குமாரனின் இந்த நேர்மை எல்லோரையும் ஈர்த்தது.
தோட்டத்தில் இருந்து அழகு சாதன பொருட்கள்
தான் சினிமா துறையில் பெரிய வருமானம் ஈட்டவில்லை என்று தெரிந்த பின்னரும் அவர் பின்தங்கவில்லை. இதற்கு மாறாக தன்னம்பிக்கையுடன் ஒரு புதிய முயற்ச்சியில் இறங்கி உள்ளார்.
அது தான் 'இமயா நேச்சுரல்ஸ்' என்ற பெயரில் ஒரு புதிய பிசினஸ். தான் சொந்தமாக வளர்க்கும் செடிகளில் இருந்து, 100 சதவீதம் இயற்கை முறையில் அழகுசாதனப் பொருட்களை உருவாக்கி, அவற்றைச் சந்தைப்படுத்தத் தொடங்கியுள்ளார்.
இது வெறும் பிசினஸ் மட்டுமல்ல, அவருடைய கஷ்டமான வாழ்க்கைக்குப் பிறகு, அவருடைய தோட்டத்தில் இருந்து பிறந்த ஒரு புதிய கனவு என்றே சொல்லலாம்.
சென்னையில் சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் அறிமுக விழா நடைபெற்றது. இந்த விழாவின் வளாகத்தில் ஸ்டால் போட்டு தனது அழகு சாதன பொருட்களை விற்பனை செய்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |