ராஜா ராணி சீரியலின் மாமியார் யார் தெரியுமா? இந்த தமிழ் நடிகையின் நெருங்கிய உறவினராம்- வெளியான புகைப்படம்
பிரபல டிவியின் ராஜா ராணி தொடர் ஹிட்டடித்ததை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆல்யா மானசா- சித்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர், நன்கு படித்து IPS கனவுகளுடன் இருக்கும் பெண், திடீரென திருமணமானதால் கனவுகள் கலைந்துவிட்டதாக கவலைப்படுகிறார்.
அத்துடன் மாமியார் வீட்டிலும் பிரச்சனைகள் எழ, அதை சமாளித்து எப்படி தன்னுடைய கனவை நிறைவேற்றுவார் என்பதே கதை. முதலில் மெதுவாக நகர்ந்தாலும், தற்போது விறுவிறுப்பான காட்சிகளுடன் ராஜா ராணி 2 வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முக்கியமாக மாமியார் வேடத்தில் நடிக்கும் நடிகை பிரவீனா பலரையும் கவர்ந்து உள்ளார்.
மலையாளம், தமிழ் மொழிகளில் பல்வேறு விருதுகளை பெற்ற இவர், பிரபல 80ஸ் நாயகியான நடிகை ஸ்ரீவித்யாவின் நெருங்கிய உறவினராம். அதாவது, ஸ்ரீவித்யா இவருக்கு அத்தை முறை வேண்டும் என்று தெரிகிறது, இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பிரவீனா வெளியிட வைரலானது.