கணவனின் காலில் விழுந்து கதறும் அர்ச்சனா! ராஜா ராணி சீரியலில் அடுத்துவரப்போகும் சீன் என்ன தெரியுமா?
இந்தி தொடரின் தழுவலாக இருந்தாலும் ராஜா ராணி 2 சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது.
ராஜா ராணி புகழ் ஆல்யா மானசா, திருமணம் புகழ் சித்து ஹீரோ ஹீரோயினாக அசத்த பல டுவிட்ஸ்களுடன் டாப் ரேட்டிங்கில் சென்று கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் சந்தியாவை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என அர்ச்சனா எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே தோல்வியில் முடிகின்றன.
ஆனாலும் கணவர் சரவணன் சப்போர்ட்டில் இருக்கும் சந்தியாவுக்கு தற்போது புது வடிவில் பிரச்சனை உருவாகியுள்ளது.
சந்தியா இங்கிருந்து மேலும் கஷ்டப்பட வேண்டாம் என நினைக்கும் சரவணன், விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறான்.
கண்ணீருடன் அதை வாங்கும் சந்தியா வீட்டை விட்டு செல்ல முடிவெடுக்கிறாள், இருவரும் பிரிந்துவிடுவார்களா என்ற பரபரப்பு எகிறியுள்ள நிலையில், அடுத்தடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையே பார்வதியை விக்கியிடம் சிக்க வைக்க சதி திட்டம் போட்டு செந்திலிடம் அர்ச்சனா சிக்கிக்கொண்டதால், அர்ச்சனாவிடம் பேசுவதை செந்தில் நிறுத்திக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் செந்திலின் காலில் விழுந்து அர்ச்சனா அழுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாம், இதை அவரே இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.