விவாகரத்து பேப்பரில் கையெழுத்திட்ட சரவணன்... அடுத்து என்ன நடக்கும்? கதறி அழும் சந்தியா
மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி சீரியலில் திடீர் திருப்பமாக விவாகரத்து பேப்பரில் சரவணன் கையெழுத்திட, கதறி அழுது கொண்டிருக்கிறார் சந்தியா.
மிக பிரபலமான இந்தி சீரியலை தழுவி எடுக்கப்படும் தொடர் தான் ராஜா ராணி 2, போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் வாழும் சந்தியாவுக்கு எதிர்பாராதவிதமாக திருமணம் நடக்கிறது.
படிக்காத சரவணனை திருமணம் செய்து கொள்கிறாள், ஒரு பக்கம் மாமியார் பிரச்சனை, குடும்பத்தில் தொடர்ந்து அவமானங்கள் என அடுத்தடுத்து சவால்களை சந்திக்கும் சந்தியா எப்படி தன் கனவை நிறைவேற்றுவாள் என்பதே கதை.
தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இத்தொடரில் சரவணனின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது, ஒரு வருடம் கழித்து திருமணம் வைத்துக்கொள்ளலாம் என மாப்பிள்ளை வீட்டார் கூற கோபமடைகிறாள் சந்தியாவின் மாமியார்.
“இனிமேலும் நீங்க கஷ்டப்பட வேண்டாம்” என சந்தியாவை கோபமாக அழைத்துச்செல்லும் சரவணன், விவாகரத்து பேப்பரில் கையெழுத்துப்போட்டு சந்தியா கையில் கொடுக்கிறான்.
இதைப்பார்த்ததும் ஒரு நிமிடம் அதிர்ச்சியடையும் சந்தியா, கதறி அழுகிறாள், இத்துடன் புரோமோ முடிவடைகிறது.
அடுத்து என்ன நடக்கும்? சந்தியா வீட்டை விட்டு செல்வாளா? என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் காணலாம்.