ராஜா ராணி சீரியலிலிருந்து திடீரென விலகிய பிரபல நடிகை! இவருக்கு பதில் யார்னு தெரியுமா?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா விலகியுள்ள நிலையில், அவருக்கு பதில் மற்றொரு நடிகை எண்ட்ரி கொடுத்துள்ளார்.
ராஜா ராணி
பிரபல ரிவியில் ராஜா ராணி சீசன் 2ல் ஆல்யா மானசா நடித்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சீரியலிலிருந்து விலகினார். இவருக்கு பதிலாக ரியா விஸ்வநாத் நடித்து வருகின்றார்.
ஆதியின் காதல் பிரச்சினையில் குறித்த சீரியல் பரபரப்பாக சென்ற கொண்டிருந்த நிலையில், அர்ச்சனாவிற்கு சீரியலில் வளைகாப்பு நடைபெற்றது.
இதில் ஆதியில் காதலியும் வந்துள்ள நிலையில், அவர் கர்ப்பமாக இருந்த அதிர்ச்சியை பிரபல ரிவி வெளியிட்டது.
இவ்வாறு பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலிலிருந்து மற்றொரு நடிகை விலகியுள்ளாராம்.

வில்லி அர்ச்சனா
வில்லிக்கு வளைகாப்பு முடிவடைந்த நிலையில் இவர் குறித்த சீரியலிலிருந்து விலகியுள்ளார். இவர் சிறந்த வில்லிக்கான விருதையும் வென்றிருந்தார்.
அர்ச்சனாவும் பாரதி கண்ணம்மா சீரியலின் அருண்பிரசாத்தும் காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில், இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதனால் திருமணத்திற்காக அர்ச்சனா குறித்த சீரியலை விலகியுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
