சமந்தாவுடன் இரண்டாவது திருமணம்... இயக்குனர் ராஜ் நிடிமோருவின் முதல் மனைவியின் வைரல் பதிவு
நடிகை சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருவை இன்று இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், ராஜ் நிடிமோருவின் முதல் மனைவி வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகின்றது.
நடிகை சமந்தா
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவைக் காதலித்து, திருமணம் செய்தார். பின்பு சில வருடங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு அவரைப் பிரிந்தார்.
இயக்குனர் ராஜ் நிடிமோரு இயக்கிய பேமிலி மேன் என்ற வெப்சீரிஸில் சமந்தா நடித்தார். இதில் நடிக்கும் போது இருவருக்கும் நட்பு ஆரம்பமாகியது.

இவர்கள் இருவரும் வெளியிடங்களுக்கு சென்று ஒன்றாக புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர். குறித்த புகைப்படங்களால் சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் காதல் என்று கிசு கிசுக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகை சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருவை இரண்டாவதாக இன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கோவையில் ஈஷா மையத்தில் மிகவும் எளிமையாக நடைபெற்றது.
திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ராஜ் நிடிமோருவின் முதல்மனைவியின் பதிவு வைரலாகி வருகின்றது.

இவர் தனது ஸ்டோரியில், "விரக்தியானவர்கள் விரக்தியான செயலை செய்வார்கள்" என்ற மைக்கேல் புரூக்ஸின் கூற்றினை வைத்திருப்பது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |