மழைக் காலத்தில் வெள்ளரி எப்படி வளர்ப்பது? தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக விவசாயம் செய்பவர்கள் ஈரமான மற்றும் நன்கு நீர் வடிகட்டிய மண்ணில் வெள்ளரி நன்றாக வளரும் என்பார்கள்.
கோடைக்காலத்தை விட மழைக்காலத்தில் தான் அமைதியாக உட்கார்ந்து இயற்கையை அனுபவிக்க நேரம் கிடைக்கும்.
அத்துடன் நகர வாழ்க்கையில் இருப்பவர்கள் மாடித்தோட்டம் அமைப்பதற்கான சிறந்த சூழலும் மழைக்காலம் பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் கோடைக்காலத்தை விட மழைக் காலங்களில் வெள்ளரி எப்படி நடவு செய்வது? அதனை எப்படி எல்லாம் பராமரிப்பது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
வெள்ளரிக்காய் பயிர்செய்கை
மற்ற காய்கறிகள் போல் அல்லாமல் வெள்ளரிக்காய் தண்ணீர் மற்றும் சூரியனை மூலப் பொருளாக வைத்து வளரக் கூடிய தாவரமாக பார்க்கப்படுகின்றது.
வெள்ளரி நீர்ப்பாசனம், வெப்பத்தை உள்ளெடுத்து வேகமாக வளர்ந்து குறுகிய நாட்களில் சிறந்த விளைச்சலை தரும். அத்துடன் வெள்ளரி ஒரு கொடி தாவரம். இதனால் நாம் எங்கு வேண்டும் என்றாலும் வைத்து வளர்க்கலாம்.
வளர்ப்பது எப்படி?
1. வெள்ளரிக்காய் செடிக்கு நீர், சூரிய ஒளி அவசியம் இதனை சரியாக தேர்வு செய்து ஒரு இடத்தில் வைக்கவும். மேலும் வெள்ளரி நீர் வடிகட்டிய மண்ணில் வெள்ளரிகள் நன்றாக வளரும்.
2. பயிர் செய்கையின் போது வெள்ளரி விதைகளை 1 அங்குல ஆழத்திலும் 2-3 அங்குல இடைவெளியிலும் ஒரு வரிசையில் நடவும். இடம் போதாமை இருந்தால் சட்டி வைத்து கூட வளர்க்கலாம்.
3. இந்த முறையில் பயிர் இடுவதால் ஈரமான தரையில் இருந்து பழங்கள் சேதமடையாமல் பாதுகாக்கும். அத்துடன் வெள்ளரிகள் வளர உகந்த வெப்பநிலை 16-32 ° C என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |