வானில் இருந்து கொட்டி தீர்த்த மீன் மழை.. வியப்பில் மூழ்கிப்போன மக்கள்; எப்படி நடந்தது?
வானில் இருந்து மீன் கொட்டிய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்து மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில், திடீரென பெய்த மழையில் வானில் இருந்து மீன்களும் கொட்டியுள்ளன. இதைக்கண்டு வாயடைத்துப்போன அப்பகுதி மக்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட தொடங்கினர்.
இந்த மீன்கள் மழை கடந்த டிசம்பர் 30-ம் தேதி நிகழ்ந்துள்ளது. இது எப்படி நிகழ்ந்தது என்றால்?.. அறிவியல் பூர்வமாக, காற்றழுத்தத்தால் நீர் பகுதிகளில் இருந்து மீன், தவளை போன்ற சிறிய உயிரினங்கள் நீராவி உடன் மேகங்களுக்குள் இழுக்கப்பட்டு அப்பகுதியில் இதுபோல் மீன் மழையாகப் பொழிய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகத்தில் இது போல் மீன் மழை பொழிவது இது முதல் முறை இல்லை. டெக்சாஸ் மாகாணத்துக்கு முன்னாள் அமெரிக்காவிந் கலிஃபோர்னிய மாகாணத்தில் இதுபோன்ற மீன் மழை இதற்கு முன்னர் பேய்ந்துள்ளது.
இதுமட்டுமின்றி, மெக்சிகோ, செர்பியா ஆகிய நாடுகளிலும் இதுபோல் மீன்கள் மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்நிகழ்வு உலக அதிசயமாகப் பார்க்கப்படவில்லை. ஆனால், இந்நிகழ்வை நேரில் பார்க்கும் மக்களுக்கு இது நிச்சயம் உலக அதிசயம் ஆகத் தான் இருக்கும்.
