மேகத்துடன் தோன்றிய அபூர்வமான வானவில் - இப்படி ஒரு அதிசயமா? வைரல் வீடியோ
இந்த பறந்து விரிந்த உலகில் நடக்கும் அன்றாடம் இயற்கையான அபூர்வ விஷயங்களை பார்த்து கண்டு வருகிறோம்.
அந்த வகையில், வானவில் இயற்கை நிறங்களைத் தொகுத்துக் காட்டும் ஒரு அழகியக் காட்சி பரவலாக பேசப்பட்டு வருகிறது.
சீனாவில் உள்ள ஹைகோ நகரில் தான் இந்த வானவில் மெய்மறக்கச் செய்துள்ளது. அந்த காட்சியில், வானவில் பொதுவாக வளைந்து அரைவட்டம் போலக் காணப்படும்.
ஆனால் இந்த காட்சியிலோ அது திரண்டு நிற்கும் மேகம் போலக் காட்சியளிக்கிறது. மேகத்துக்கு கிரீடம் வைத்தது போல காணப்படும் அந்த அற்புதக் காட்சியில் இருப்பது வானவில்லே இல்லை.
அது ஒரு மேகம். இந்த காட்சியைப் பார்த்த மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் இது வைரலானது.
Rainbow colored scarf cloud over Haikou city in China pic.twitter.com/ewKmQjsiIE
— Sunlit Rain (@Earthlings10m) August 26, 2022