ராகு நட்சத்திர மாற்றம் : இந்த 3 ராசிகளுக்கு ஆகஸ்ட் இறுதிக்குள் இது நடந்தே தீரும்!
பொதுவாகவே நவகிரகங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன அதன் தாக்கமானது ராசிபலன் கணிப்பில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
ஜோதிடத்தில் ராகு சக்திவாய்ந்த நிழல் கிரகமாக திகழ்கின்றது. ராகு பொதுவாக எதிர்மறையான கிரகமாக கருதப்படுகிறார், ஆனால் ராகு ஒருவருடைய ராசியில் சரியான இடத்தில் அமர்ந்தால் அவர்களுக்கு பல்வேறு வகையில் சாதக பலன்களை கொடுப்பார்.

அந்தவகையில், மே 31 ராகு சதய நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து முதல் பாதத்திற்குப் பெயர்ச்சியாகின்றார். ராகு ஆகஸ்ட் 2 வரை, அதாவது ஏறக்குறைய 64 நாட்கள், அதே நிலையில் நிலைத்திருப்பார்.
ஜோதிட ரீதியில் ராகுவின் வக்ர பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. அதன் தாக்கமானது அனைத்து ராசிகளும் குறிப்பிடத்தக்க சாதக பாதக விளைவுகளை ஏற்படுத்தினாலும், குறிப்பி்ட்ட சில ராசிகளின் வாழ்வில் பெரியளவில் அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப்போகின்றது.
அப்படி ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிகளவில் சாதக நன்மைகளை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

ராகுவின் வக்ர பெயர்ச்சியானது மிதுன ராசியினரின் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு வகையிலும் நல்ல திருப்பங்களை ஏற்படுத்தப்போகின்றது.
இவர்களின் நீண்ட கால கடன் பிரச்சினைகளை தீர்க்கும் அளவுக்கு நிதி வரவு சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக தடைப்பட்டு வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு, புதிய வேலைவாய்ப்பு போன்ற மகிழ்ச்சி செய்திகள் தேடி வரும். வருமானத்துக்கான புதிய வழிகள் திறக்கும்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு ராகுவின் இந்த பெயர்ச்சி தொழில் ரீதியில் வெற்றிக்கதவை திறக்கப்போகின்றது. இவர்களின் நிதி நிலையில் கணிசமான உயர்வு உறுதி.
கடன் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள் ராகுவின் தாக்கத்தால் திடீர் அதிர்ஷ்டம், எதிர்ப்பாராத பண வரவு என்பவற்றை அனுபவிக்கும் வாய்ப்பு அமையும்.
திருமண வாழ்ககை மற்றும் குடும்ப உறவுகளால் இதுவரை காலமும் அனுபவித்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பணவரவு இந்த காலட்டத்தில் தேவைக்கு அதிகமாகவே இருக்கும்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ராகுவின் குறித்த பெயர்ச்சியானது பல நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொடுக்கப்போகின்றது.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் குறைந்த முயற்ச்சியிலேயே கைகூடும். இவர்களின் நிதி நிலையில் சதியான மாற்றம் நிகழும். ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வங்கி கணக்கில் சேமிப்பு தொகை பலமடங்கு அதிகரிக்கும்.
புதிய தொழில் முயற்ச்சிகள் வெற்றிளிக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான யோகம் கூடிவரும். நிலம் மற்றும் பரம்பரை சொத்துக்களால் லாபம் உண்டாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |