மகர ராசிக்குள் நுழையும் ராகு - உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறப்போகும் டாப் 4 ராசிகள்!
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் நிழல் கிரகமாகக் கருதப்படும் ராகு பகவான், மற்ற கிரகங்களைப் போல் நேர்கதியில் பயணிக்காமல் எப்போதும் வக்ர நிலையில் பயணிப்பவர்.
மேலும், ராகுவிற்கு சொந்த ராசி எதுவும் இல்லை. திடீர் வெற்றி, குழப்பம், தர்மசங்கடம், அரசியல் மற்றும் லட்சியம் ஆகியவற்றின் காரணியாக ராகு கருதப்படுகிறார். ராகு ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் தங்குவார். தற்போது கும்ப ராசியில் பயணித்து வரும் ராகு, டிசம்பர் 05ஆம் தேதி மகர ராசிக்குள் நுழையவுள்ளார்.

மகர ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். பஞ்சாங்கத்தின்படி, மகர ராசியில் நுழையும் ராகு 2028ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அங்கு பயணித்து, பின்னர் தனுசு ராசிக்குள் செல்லவுள்ளார்.
சனி பகவானின் ராசியான மகரத்தில் ராகுவின் பெயர்ச்சி ஏற்படுவதால், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் இதன் தாக்கம் காணப்படும்.குறிப்பாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்களும், எதிர்பாராத திருப்பங்களும் ஏற்படும் என ஜோதிட ரீதியில் கணிக்கப்பட்டுள்ளது.
அப்படியெனில், மகர ராசிக்குள் செல்லும் ராகுவால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் நன்மைகளும் கிடைக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மேஷம்

டிசம்பரில் நடக்கும் ராகு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பாக அமையப் போகிறது. ராகு 10-ஆவது வீட்டிற்கு செல்வதால், பணியிடத்தில் நல்ல மாற்றங்களும், வேலை மற்றும் தொழிலில் வெற்றியும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.புதிய சொத்துக்களை வாங்குவதற்கான யோகம் கைகூடிவரும்.
ரிஷபம்

டிசம்பரில் நடக்கும் ராகு பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். ராகு 9-ஆவது வீட்டிற்கு செல்வதால், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
வேலை காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பும் சிலருக்கு திடீர் நிதி ஆதாயங்களும் கிடைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில், கஷ்டங்கள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கன்னி

ராகு பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். ராகு 5-ஆவது வீட்டிற்கு செல்வதால் மனநிம்மதி கிடைக்கும். புதிய நட்புகள் உருவாகி, அவற்றின் மூலம் நல்ல ஆதாயங்களும் கிடைக்கலாம்.
வேலை, தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி மற்றும் லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், பணப் பரிவர்த்தனைகளில் சற்று கவனமாக இருப்பது சிறப்பு.
மகரம்

டிசம்பர் மாத ராகு பெயர்ச்சியால் மகர ராசியின் முதல் வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் ஏற்படலாம்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |