இன்று முதல் ராகுவின் புதிய பயணம்: தொழிலில் முன்னேற்றம் காணப்போகும் டாப் 3 ராசிகள்!
ஜோதிட ரீதியில் நவகிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில் நிழல் கிரகமாகக் கருதப்படும் ராகு, ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் தங்குவார். இந்தக் காலத்தில் அவர் நட்சத்திரங்களையும் மாற்றுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும் என நம்பப்படுகிறது.

தற்போது கும்ப ராசியில் பயணிக்கும் ராகு, ஜூன் 30 ஆம் திகதி இன்று அவிட்டம் நட்சத்திரத்திற்குள் நுழைந்து டிசம்பர் வரை அங்கேயே இருப்பார். இந்த நட்சத்திரப் பெயர்ச்சி தொழில், நிதி, வியாபாரம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.
இந்தப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சவால்களையும், சிலருக்கு வளர்ச்சி மற்றும் லாபத்தையும் தரக்கூடும். குறிப்பாக தொழிலில் முன்னேற்றம் மற்றும் நல்ல வருமானம் பெறப்போகும் ராசிகள் யார் யார் என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

ராகுவின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலை பாரிய வளர்ச்சி காண போகின்றார்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். பணியிடத்தில் அதிகாரிகளின் ஆதரவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். போட்டித் தேர்வுக்கு தயாராகும்வர்களுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
சிம்மம்

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நிதி வளர்ச்சி ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் மன அமைதியும் அதிகரிக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். நீண்ட நாள் குடும்பப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
துலாம்

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
வியாபாரிகளுக்கு நல்ல லாபமும், நீண்ட தூர பயணங்களால் நிதி ஆதாயமும் கிடைக்கும். புதிய நட்புகள் உருவாகி எதிர்காலத்தில் உதவியாக இருக்கும்.
வேலை மாற்ற நினைப்பவர்களுக்கு இது நல்ல காலம். மொத்தத்தில் இந்த காலம் முன்னேற்றத்தையும் புதிய வாய்ப்புகளையும் கொடுக்கப்போகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |