18 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பெயர்ச்சி- ராகுவால் 2025-ல் யோககாரராக போகும் ராசிகள்
வேத ஜோதிடத்தின்படி நிழல் கிரகமாக ராகு பார்க்கப்படுகிறார். இவரின் ஆசியால் செழிப்பான ஒரு வாழ்க்கையை வாழலாம்.
இப்படிப்பட்ட ராகுவுக்கு சொந்த ராசி என்று எதுவும் இல்லை. மாறாக ராகு, ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார்.
இவர் கடுமையான பேச்சு, சூதாட்டம், சரும நோய்கள், பயணங்கள் ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படுகிறார். தற்போது ராகு மீன ராசியில் பயணித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ராகு சனி பகவானின் ராசியான கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார்.
ராகு சனி பகவானின் ராசிக்கு செல்வதால், அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் அதிர்ஷ்டம் கிடைக்கவுள்ளது.
அந்த வகையில், எதிர்வரும் 2025-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
கும்பம் | கும்ப ராசியில் பிறந்தவர்கள் எதிர்வரும் 2025-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் கிடைக்கவுள்ளது. அதிலும் குறிப்பாக உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். இதனால் வேலை செய்யும் இடங்களில் ஆளுமை மேம்படும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல வெற்றியை காணலாம். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்பட்டு வலுவான நிதி வரவு இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக எப்போதும் போல் அல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும். கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கை துணை நல்ல முன்னேற்றத்தைக் காண்பார். உங்களுடைய திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். வாழ்க்கை முறையில் சிறப்பான மாற்றங்களைக் காணலாம். |
ரிஷபம் | ரிஷப ராசியில் பிறந்தவர்கள் எதிர்வரும் 2025-ல் ராகு பெயர்ச்சியால் சாதகமான பலன்களை பெறுவார்கள். ராகுவின் தாக்கம் தொழிலில் இருப்பதால் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தொழில் தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்வீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள் மற்றும் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களாக பெறுவீர்கள். |
மிதுனம் | 2025-ல் ராகு பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு விதியில் நல்ல மாற்றம் ஏற்படப் போகிறது. அதிலும் குறிப்பாக நீண்ட காலமாக முடியாமல் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சிந்திக்கும் திறன் மேம்பட்டு எதையும் எளிதில் புரிந்து கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் எப்போதும் சிறந்த முடிவுகளை எளிதில் எடுப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெற வாய்ப்புள்ளது. |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).