சக்தி வாய்ந்த கிரகமாக மாறும் ராகு.. இவங்களுக்கு தலைவிதியே மாறும்- ஜாக்கிரதை!
ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, பாவ கிரகமாக பார்க்கப்படும் ராகு தன்னுடைய ராசியை 18 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுவார்.
இவருடைய நட்பு ராசியான கும்பத்தில் பயணித்து வரும் ராகு கடந்த மே 18 2025 ஆம் தேதி தன்னுடைய ராசியை மாற்றினார்.
இந்த பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிக்காரர்களுக்கும் இருந்தது. அது சிலருக்கு அதிர்ஷ்டத்தையும் சிலருக்கு பிரச்சினையையும் கொடுத்தது.
கடந்த சில மாதங்களாக ராகு, குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சிக்கல்களை கொடுத்து வருகிறார். ஏனெனின் அவரது அம்ச பலம் 24 டிகிரிக்கும் கீழ் உள்ளது. இறந்த நிலையில் இருந்து முதுமைக்கு நகர்ந்து கொண்டிருக்கும் ராகுவால் வாழ்க்கையே மாறியவர்களும் இருக்கிறார்கள்.
இன்று நடக்கும் பெயர்ச்சி
முதுமையில் இருக்கும் ராகு இன்றைய தினமான செப்டம்பர் 10 ஆம் தேதி அம்ச பலம் 23 டிகிரியாக இருப்பார். இதனால் அவருடைய முதுமைப்பருவம் மறைந்து இளமை வர ஆரம்பிக்கும்.
செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் ராகு 30 டிகிரி முதல் 24 டிகிரி வரையிலான வரம்பை கடக்கப்போகிறார். அப்போது டிகிரி வலிமை 23 டிகிரியாக இருக்கும்.
அதே போன்று 22°, 21°, 20°, 19° என குறைந்து 18 டிகிரியை எட்டும். அந்த சமயத்தில் ராகு 18° அடைந்து இளமை பருவத்தில் பயணம் செய்வார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு மாத்திரம் நன்மை நடக்கும்.
அப்படியாயின், ஜோதிடத்தின் படி ராகுவின் இளமை பருவம் திரும்புவதால் என்னென்ன ராசிகளில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை மாறப்போகிறது என்பதை பதிவில் பார்க்கலாம்.
தலைவிதியை மாற்றும் ராகு பெயர்ச்சி
மகரம் | மகர ராசியில் செல்வ ஸ்தானத்தில் இருக்கும் ராகுவானது 6, 8, 10 ஆகிய வீடுகளை பார்வையிடுகிறார். இதனால் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வருமானம் அதிகமாக இருக்கும். செல்வத்தின் மீதான ஆசைகள் அதிகமாக இருக்கும். சில தவறான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை உருவாகும். இதனை குறுக்கு வழியில் சென்று சமாளிக்காமல் தீர்வை கண்டுபிடிக்க வேண்டும். இந்த சமயத்தில் புத்திசாலிகளாக இருந்தால் எதிரிகளிடம் இருந்து தப்பிக்கலாம். |
தனுசு | தனுசு ராசியில் ராகு மூன்றாவது வீட்டில் அமர்ந்திருக்கிறார். இதனால் அவருடைய பார்வை 7, 9, 11 ஆகிய வீடுகளில் விழுகிறது. இந்த பெயர்ச்சியால் இவர்களுக்கு வேலையில் சாதிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். வெற்றிப் பெற்றவர்களாக உணர்வார்கள். வீடு, வீரம், முயற்சி, ஊடகம், கலை ஆகியவற்றுடன் தொடர்புடைய நற்செய்திகள் உங்கள் வீடு தேடி வரும். ஆனால் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் சற்று கவனமாக இருப்பது நல்லது. ஏனெனின் ராகுவின் பார்வை ஏழாம் வீட்டில் விழுகிறது. அதிலும் குறிப்பாக நீதிமன்ற வழக்குகள் வர வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். |
கும்பம் | கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு லக்னத்தில் பயணிக்கிறார். இவர்கள் இளம் பருவத்தில் புதிய வாழ்க்கைக்கு நுழைகிறார். அத்துடன் மனம் மற்றும் மூளை இரண்டையும் கவனமாக பார்த்துக் கொண்டால் நீங்கள் நினைத்து துளையில் சாதிக்கலாம். மகத்தான வெற்றியை பெற காத்திருக்கிறார்கள். 5, 7, 9 ஆவது வீடுகளை ராகு பார்வையிடுவதால் அவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்கவும் வாய்ப்பு உள்ளது. |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
