ராகு பெயர்ச்சியால் அரங்கேறும் ராஜயோகம்... அக்டோபர் வரை அமோகமாக இருக்கும் 4 ராசிகள்
கிரகங்களின் பெயர்ச்சி என்பது ஜோதிடத்தில் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. ஆம் கிரகங்களின் பெயர்ச்சியின் போது மங்களகரமான மற்றும் அசுப யோசகங்கள் உருவாகின்றது. இதனால் சில ராசிகளில் தாக்கம் ஏற்படும்.
கிரகங்களில் சனி கிரகம் தான் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகின்றது. நிழல் கிரகங்களாக ராகு மற்றும் கேது இருக்கின்றனர்.
ராகு கிரகமானது ஏப்ரல் 12ம் தேதி காலை 11.58 மணிக்கு மேஷ ராசியில் பெயர்ச்சியான நிலையில், அக்டோபர் மாதம் 30ம் தேதி அதிகாலை 2.13 வரை மேஷ ராசியில் இருப்பார். பின்பு மீன ராசிக்குள் நுழைவார்.
ராகு கேது
ராகு மற்றும் கேதுவின் பெயரைக் கேட்டாலே மக்கள் அச்சப்படுவதுண்டு. ஆனால் இவ்வாறு அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. ஒருவரது ஜாதகத்தில் சுப ஸ்தானத்தில் ராகு கேது இருந்தால், சுப பலன்களை பெறலாம்.
ராகுவின் பெயர்ச்சியினால் ஏற்படும் தாக்கம் அக்டோபர் மாதம் வரை அனைத்து ராசிகளிலும் இருக்கும் நிலையில், சில குறிப்பிட்ட ராசிகளுக்கு மட்டும் ராஜயோகமும் கிடைக்கின்றது.
கடகம்:
கடக ராசியினர் இத்தருணத்தில் எந்த வேலையில் ஈடுபட்டாலும் பண பலன்கள் கிடைப்பதுடன், அதிக பலன்களையும் அனுபவிப்பார்கள். வியாபாரத்தில் இருப்பவர்கள் நல்ல லாபம் ஈட்டுவதுடன், நோய்களும் விலகி நிற்குமாம்.
கும்பம்:
கும்பம் ராசியில் மூன்றாவது வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால், இவர்களுக்கு நம்பிக்கை அதிகமாக இருப்பதுடன், வியாபாரத்தை முன்னேற்றத்தை பெற புதிய வழிகளும் அமையும், வேலையில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
சிம்மம்:
சீறி வரும் சிம்ம ராசியினருக்கு இந்த நேரத்தில் உத்தியோகத்தில் நன்மைகள் கிடைப்பதுடன், இலக்குகளையும் எளிதாக அடைவீர்கள். குடும்பத்துடன் இனிமையாக பொழுதை கழிக்கும் இந்த நேரத்தில் பயணங்களினால் செலவு அதிகரிக்கும். ஆனால் இப்பயணத்தில் ஆக்கப்பூர்வமான நன்மையையும் பெறுவீர்கள்.
விருச்சிகம்:
ராகுவின் பெயர்ச்சியினால் விருச்சிக ராசியினருக்கு நல்ல வேலை கிடைப்பதுடன், ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு இவற்றை பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வலுவான ஆதரவு கிடைக்கும் இத்தருணத்தில் ஆரோக்கியத்திலும் கவனம் எடுத்துக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |