ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா?
நவகிரகங்களில் ராகு மற்றும் கேது ‘நிழல் கிரகங்கள்’ என அழைக்கப்படுகின்றன. ஜோதிட நம்பிக்கைகளின்படி, இவை ஒருவரின் தொழில், நிதி நிலை, உறவுகள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் பெரும்பாலும் பாதக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
பொதுவாக ராகு, கேது சவால்களைத் தரும் கிரகங்களாகக் கருதப்பட்டாலும், சில நேரங்களில் அவற்றின் பெயர்ச்சிகள் வெற்றி மற்றும் புதிய வாய்ப்புகளையும் வழங்கும்.

தற்போது ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் சஞ்சரித்து வருகின்றனர்.ஜோதிட கணிப்புகளின்படி, டிசம்பர் 5-ஆம் தேதி இவை முறையே மகரம் மற்றும் கடக ராசிகளுக்கு பெயர்ச்சி அடையவுள்ளன.
அதுவரை நிலவும் இந்த கிரக அமைப்பு, சில ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி, நிதி ஆதாயம் மற்றும் புதிய வாய்ப்புகளை வழங்கும் என நம்பப்படுகிறது. ராகு- கேது ஆசியால் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

டிசம்பர் 5-ஆம் தேதி வரை கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். பல ஆசைகள் நிறைவேறவும், எதிர்பாராத நன்மைகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
திட்டங்கள் வெற்றி பெறும், வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். குடும்ப ஆதரவு கிடைப்பதுடன், குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும்.
மரியாதை, நற்பெயர் உயரும். பழைய முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை கொடுக்கும். நீண்ட கால கடன் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு நிதி நிலை வலுவடையும்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலம் வருமானம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக அமையும். புதிய முயற்சிகள் எளிதில் வெற்றியை கொடுக்கும்.
நிதிநிலை மேம்படும், பணியில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கலாம். சிக்கிய பணம் திரும்ப கிடைக்கவும், வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் பெறவும் வாய்ப்புள்ளது.
வேலை தொடர்பான வெளிநாட்டு வாய்ப்புகள் உருவாகலாம். பழைய முதலீடுகளில் லாபம் கிடைக்கவும், குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் வரவும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் முயற்சிகளுக்கு துணையாக இருக்கும்.
கும்பம்

ராகு பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை தரக்கூடிய காலமாக இருக்கும். வாழ்க்கையில் பல துறைகளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு, பொருளாதார நிலை மேம்படும்.
நீண்டகால ஆசைகள் நிறைவேற வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். நிதி நிலை வலுப்பெற்று, புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொடுக்கும்.
குறிப்பாக மனநிலையில் தெளிவும், உற்சாகமும் உண்டாகும். ஆரோக்கிய விடயங்களில் சந்தித்து வந்த பிரச்சினைகள் நீங்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |