2024ல் ராகு கேது நட்சத்திர பெயர்ச்சி... அதிரடி ராஜயோகத்தை அடையும் ராசிகள்
ராகு மற்றும் கேது நட்சத்திர பெயர்ச்சியால் ஏற்படும் தாக்கம் குறித்தும், 12 ராசிகளில் எந்த ராசிக்கு விளைவு என்பதைக் குறித்து பார்ப்போம்.
நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவில் புத்தாண்டின் துவக்கத்திலேயே பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ராகு ரேவதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திலும் கேது சித்திரை நட்சத்திரத்தின் முதல் பாதத்திலும் பெயர்ச்சி ஆகியுள்ளனர்.
இதில் எந்தநெந்த ராசி அதிர்ஷ்டத்தை வெல்லும் என்றும் எந்த ராசி இன்னல்களை சந்திக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசியில் ராகு மற்றும் கேது ஏழாம் வீட்டில் உள்ள நிலையில், திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருந்தால் சீராகும். இந்த காலக்கட்டத்தில் நிம்மதி பெருமூச்சு விடுவதுடன், திருமண தடைகள் எல்லாம் நீங்கிவிடுமாம்.
ரிஷபம்
ராகு மற்றும் கேது ரிஷப ராசியில் ஆறாம் வீட்டில் அமைந்துள்ளதால் வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படுவதுடன், போட்டித் தேர்வுகள் மற்றும் பிற துறைகளில் சிறப்பாக செயல்படுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சியால் காதல் உறவுகளில் பிரச்சினை ஏற்படுமாம். மாணவர்களுக்கு சில சிக்கல் ஏற்படும் நிலையில், வெப் டிசைனில் பணியாற்றுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
கடகம்
கடக ராசியினரைப் பொருத்தவரையில் ராகு கேது கிரகமானது தாய்க்கு தொல்லை ஏற்படுத்துவதுடன், உடல் நிலை மோசமடையவும் செய்யும். அதுவே நான்காம் வீட்டின் அதிபதியான சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் எதிர்மறை தாக்கத்தினை நீங்கள் உணர மாட்டீர்கள்.
சிம்மம்
ராகு மற்றும் கேது இந்த பெயர்ச்சியால் சிம்ம ராசியினருக்கு அபரிமிதமான தைரியத்தை கொடுப்பார் மற்றும் நெருக்கமானவர்களிடையே இடைவெளி ஏற்படலாம். அன்புக்குரியவர்களின் தொடர்பு துண்டிக்கப்படும்.
கன்னி
ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சியால் கன்னி ராசிக்கு பேச்சாற்றல் பாதிக்குமாம். உங்களது நோக்கத்தை தவறாக புரிந்து கொள்ளும் நிலை ஏற்படுமாம். ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் நீங்கள் சரியான திசையில் நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்குமாம்.
துலாம்
துலாம் ராசியனரைப் பொருத்தவரையில் இந்த பெயர்ச்சியானது நல்லதாகவே இருக்கின்றது. அனுகூலமான பலன்கள் கிடைப்பதுடன், நேர்மையான மற்றும் யதார்த்தமான மதிப்பீடுகள் மற்றும் முடிவுகளை எடுப்பார்கள். பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகளை கொண்டு வருவார்கள்.
விருச்சிகம்
ராகு மற்றும் கேது கிரகங்களின் நிலைகள் சாதாகமாக இருந்தால், ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிப்பதுடன், வெளிநாடு செல்வதற்கும், வெளிநாட்டிலிருந்து லாபம் ஈட்டுவதற்கு வழி கிடைக்கும். அதுவே சுக்கிரன் அல்லது புதனின் நிலை பாதகமாக இருந்தால் வெளிநாட்டு வேலைகளால் நஷ்டமும் ஏற்படலாம். ஆகையால் கவனமாக இருப்பது நல்லது.
தனுசு
ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சியினால் தனுசு ராசியினருக்கு பொருளாதார பலன் கிடைப்பதுடன், நிதி விடயங்களில் முழு ஆதரவும் கிடைக்குமாம். செல்வங்களை குவிக்கும் இந்த காலக்கட்டத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் இவர்களுக்குத்தான் இருக்கின்றது.
மகரம்
ராகு மற்றும் கேது நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசியினர் புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள். ஆனால் தந்தையுடன் சில விடயங்களில் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. முன்னேற்றம் அடைய பல பிரச்சினைகளை கடந்து வர வேண்டியிருக்கும். மனக்கவலைகள் இருக்கலாம்.
கும்பம்
கும்ப ராசியினர் ஆரோக்கியமாகவும், அச்சமற்றவர்களாகவும், திறமைசாலியாகவும் இருப்பதுடன் தங்களது வியாபாரத்தை முன்னேற்ற கடினமாக உழைக்கவும் செய்வார்கள்.
மீனம்
மீன ராசியினர் ராகு கேதுவின் சஞ்சாரத்தால் உடல்நிலை பிரச்சினைகள் ஏற்படலாம். கேது அவ்வப்போது பிரச்சினைகளை கொடுத்துக் கொண்டிருப்பதால், வாகனத்தில் செல்லும் கவனமா செல்லவும். உங்களது ஜாதகத்தில் சுக்கிரனும், செவ்வாயும் மோசமான நிலையில் இருந்தால் பிரச்சினை அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |